Timeline
1947: Prime Minister Jawaharlal Nehru makes a speech stating that dam-building is the same as
nation-building.
1954: Medha Patkar born.
1969: Dams on the sacred
1979: Sardar Sarovar Project calls for 30 major dams, 135 medium dams, and 3,000 small dams to
be build.
1980s: After graduating in social work, Patkar works in the Mumbai slums.
1985: Patkar visits
impact of dams on ousted peoples. Begins massive mobilizing projects.
1986: Government calls upon World Bank to help provide financing for dam projects. Patkar and
colleagues lead 36 day protest march.
1988: The construction of the Sardar Sarovar dam--the linchpin of the Narmada Valley Development -
begins. Patkar helps merge protest movements into single unit known as the Narmada Bachao
Andolan.
1990. Thousands of people affected by the dam set off on a march to the dam site. Patkar wins
Goldman Environmental Award.
1991: Patkar engages in a 21 day protest fast which brings her close to death. World Bank
announces an Independent Review of the Sardar Sarovar Projects.
1993: World Bank finally pulls out of the Sardar Sarovar Projects.
1995: Supreme Court stops all construction of Sardar Sarovar Project.
1996: State governments continue increasing height of dam; Patkar arrested for standing in
submerged sites caused by
(NAPM). Joins protests against World Trade Organization in
1998:
others hold protest rallies in Capital: “We want rotis, not bombs.”
2000: Patkar joins protests against IMF and World Bank in
final judgment in the Sardar Sarovar case, allowing construction to resume on the controversial dam
on the
abusive slogans.
2001: Patkar files Contempt Petition before the Supreme Court of India and is acquitted.
2006: Patkar supports demonstrations against police killing of 12 tribals who had protested the
construction of a steel company on their lands
| |
காட்டுமிராண்டித்தனமான விளையாட்டை அம்பலப்படுத்துவோம்
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டபோது
மேதா பட்கர் வெளியிட்ட அறிக்கை
உச்ச நீதிமன்றம் நிலவரத்தை அறிந்திருக்கிறது; ஆனால் நடந்துவரும் அணைக் கட்டுமானப் பணியை அது நிறுத்திவைக்கவில்லை. அது தற் போதைக்கு மோடியையும் அவரது கூட்டத்தாரையும் இன்னொரு குற்றத்தைச் செய்ய அனுமதித்திருக்கிறது. இம்முறை அது 'நீர் பலி'. நான் நொறுங்கிப்போனதுபோல் உணர்கிறேன். ஆனால் அடுத்த 15 நாள்களுக்குள், அதாவது மே 1ஆம் தேதி வாக்கில், உண்மை தன்னை நிரூபித்துக்கொள்ளும் என்று ஏதோ ஒரு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
மோடி மற்றும் இதில் அவரது கூட்டாளியாகச் செயல்படும் குஜராத் காங்கிரசின் நிர்பந்தங்களுக்கு இரையாகி, உண்மைகளை அப்பட்டமாக அவமதிக்கும் போக்கை மத்திய அரசு வெளிப்படுத்தியிருக்கிறது; மூன்று மத்திய அமைச்சர்களின் நேரடி அனுபவ அறிக்கைகளையே அவமதித்திருக்கிறது. மோடி மனித குலத்திற்கு எதிராக இன்னொரு குரூரமான குற்றத்தைச் செய்யவிருக்கிறார்; இதில் அவர் குஜராத்திற்குத் துரோகம் இழைத்திருப்பதும் நிரூபிக்கப்படும். அவர் தனது ஆதாயத்தையும் பா.ஜ.கவின் ஆதாயத்தையும் குஜராத்தின் வெற்றியாகக் காட்டப் பார்க்கிறார்.
ஒரு பக்கம் பிரதமர் தான் இன்னும் அமைச்சர்களின் அறிக்கையைப் படிக்கவில்லை என்கிறார்; அதே சமயம் இந்தியக் கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் சட்டவிரோதமாக, ஆதாரமின்றி, சிரிப்பைக்கூடத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அரசுகளால் கடந்த 25 ஆண்டுகளாக விவசாய நிலத்தையோ வீட்டு வசதியளிக்கப் போதுமான நிலத்தையோ கண்டறிய முடியவில்லை எனும்போது, ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வு தரும் பணி மூன்றே மாதங்களில், அதுவும் மழைக் கால வெள்ளத்திற்கு முன் செய்து முடிக்கப்படும் என்றால் யார் நம்புவார்கள்?
குஜராத் அரசியல் உருவாக்கும் வகுப்பு சார்ந்த மற்றும் கிரிமினல் நிர்பந்தங்களை எதிர்கொள்வதில் பிரதமரும் காங்கிரஸ் கட்சியும் நம்ப முடியாத அளவு பலவீனத்தைக் காட்டியிருக்கின்றனர். பிரதமர் தனக்கு உச்ச நீதிமன்றம் 2000இல் அளித்த தீர்ப்பில் வழங்கிய அதிகாரத்தை இன்னும் பயன்படுத்தவும் இல்லை, தனது அமைச்சர்களின் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் இல்லை.
கேவலமான, சுயநலமான அரசியல் நோக்கங்களுக்கு முன் ஜனநாயக அடித்தள அமைப்பு, பகுத்தறியும் திறன், அறிவியல்பூர்வமான தன்மை, நேர்மை, நாணயம் என நர்மதை வழக்கு, மீண்டும் அரசு அமைப்பைப் புரட்டிப் போடுவது நிரூபணமாகியிருக்கிறது.
உண்மையை ஓரளவிற்கு மேல் மறைக்க முடியாது. அது வெளிப்படும் சமயத்தில் இந்த அணை லட்சக்கணக்கான ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகளின் மரணத்தையும் அழிவையும் குறிக்கும் கல்லறையாகிவிடும். அவர்களது படுகொலை - தற்கொலை அல்ல - வரலாற்றில் எழுதப்பட்டுவிடும். ஆனால் இயற்கையைச் சார்ந்திருந்து பாடுபட்டு வாழும் மக்களையும் வகுப்புகளையும் பலிகொண்டு எதிர்காலத்தில் உருவாகக்கூடிய அணைகளுக்கும் வளர்ச்சிக்கும் இந்த அணை சாவு மணியாகும். இதைக் குறித்து நாங்கள் மத்திய அரசையும் மூன்று மாநில அரசுகளையும் எச்சரிக்கிறோம்.
மக்கள் சமூகத்தின் ஆதரவு பெற்ற, நீதியில் நம்பிக்கை கொண்ட ஆதிவாசிகள், தலித்துகள், விவசாயிகள் ஆகியோரின் அகிம்சை மக்கள் இயக்கத்திற்குச் சாதகமாக அரசுச் செயல்படவில்லை; அதற்குப் பதிலாக வளர்ச்சி என்னும் பெயரில் நடக்கும் வன்முறைக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறது. அது குஜராத்தில் உள்ள கடுமையான வகுப்பு மற்றும் வணிக அரசியலின் நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருப்பதுபோல் தெரிகிறது. இருந்தும் அவர்கள் துணிவுடனும் மனசாட்சியுடனும் செயல்பட இன்னும் பதினைந்து நாள்கள் இருக்கின்றன.
ஐ.மு. கூட்டணி அரசு சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. அது இப்போதும் சரியான பாதையைத் தேர்வு செய்யவில்லை என்றால் அது அமைச்சர் குழு என்ற முறையில் தனது நாணயத்திற்கும் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்திற்கும் மட்டுமின்றித் தனது 'மதசார்பற்ற' அரசியலுக்கும் 'வளர்ச்சியின் மனித முகம்' என்ற வாதத்திற்கும் கூடப் பாதகம் விளைவிப்பதாகிவிடும். ஐ.மு கூட்டணி அரசு இனியும் பல்லிழந்த பாம்பாக, உண்மையற்று இருக்கக் கூடாது.
நர்மதைப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மக்கள், வளர்ச்சிக்குப் பலியான எல்லோருடனும் சேர்ந்து இறுதிவரை, வாழ்நாள் முழுதும் போராடுவார்கள். 'வெளியேற்றப்பட்டோ'ரைப் பலி கொடுத்து நாட்டில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமான விளையாட்டை அம்பலப்படுத்துவதற்குத் தேவையானதையெல்லாம் நாங்கள் செய்வோம்.
பொய்யான, கேலிக் கூத்தான, மிகையான விளம்பரத்திற்குக் கீழ் மறைந்திருக்கும் உண்மை குஜராத் மக்களுக்கும் விரைவில் தெரியவரும். 2001இல் கட்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடம் பெயர வேண்டியிருந்த குஜராத் மக்களால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
நாங்கள் இப்போது எங்கள் போராட்டத்தை மேலும் புதிய தளங்களுக்கு எடுத்துச் செல்ல உறுதி பூண்டிருக்கிறோம். நானும் எனது மற்ற இரண்டு காம்ரேட்களான ஜம்சிங்பாய், பகவதிபெஹன் ஆகியோரும் எங்களது 21 நாள் உண்ணாவிரதத்தை விட்டு, முன்னெப்போதும் கண்டிராத சவாலுக்கு எதிராக மீண்டும் போராட வேண்டும்.
நமது நாட்டின் நிலைமையையும் வகுப்புவாதக் கிரிமினல் அரசியலால் காலடியில் நசுக்கப்படும் அரசியல் சாசன உரிமைகளையும் குறித்து நாங்கள் நிச்சயம் வேதனையும் கவலையும் அடைகிறோம். இருந்தாலும் நாங்கள் பள்ளத்தாக்கிற்குத் திரும்பிச் செல்வோம். 'நியாயமான வளர்ச்சிக்கான தேசிய மக்கள் இயக்க'த்தின் இன்றியமையாத அங்கமாகியிருக்கும் எல்லோருக்கும் எங்களது நன்றி. ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் நம் நாட்டையும் காப்பாற்றும்படி நாங்கள் நாட்டு மக்களை அழைக்கிறோம்.
மேதா பட்கரைத் தொடர்புகொள்ள:
62, மகாத்மா காந்தி சாலை, பத்வனி,
மத்தியப் பிரதேசம் - 451 551
தொ.பே.: 07290-222464
மின்னஞ்சல்: badwani@narmada.org
'மேதாவை வாழும் காந்தியாகவே நான் பார்க்கிறேன்''
நேர்காணல்: சுமித்ரா எம். கௌதமா
நர்மதை அணைக்கட்டின் உயரத்தை அதிகரிக்கும் முயற்சியால் இடப்பெயர்வுக்கு ஆளான மக்களுக்கு மறுவாழ்வு கோரி மேதா பட்கர் உண்ணாவிரதம் இருந்த நாள்களில் சென்னையில் அவருக்கு ஆதரவாக ஏப்ரல் ஏழாம் தேதியன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதை ஏற்பாடு செய்தவர்கள் வி. அருண் மற்றும் சுமித்ரா எம். கௌதமா. கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் ஆப் இந்தியா என்னும் அமைப்பின் 'த ஸ்கூல்' என்னும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சுமித்ரா எம். கௌதமாவுக்கு நர்மதை அணைப் பிரச்சினையில் உள்ள ஈடுபாடு ஆழமானது.
கடந்த எட்டு ஆண்டுகளில் அணைக்கட்டுப் பகுதிகளுக்குச் சில முறை சென்று வந்திருக்கும் சுமித்ரா, மேதா பட்கரைப் பல முறை சந்தித்திருக்கிறார். இப்பிரச்சினை குறித்துக் காலச்சுவடு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன் இவரைச் சந்தித்துப் பேசினார். உரையாடலிலிருந்து சில பகுதிகள்:
நர்மதை அணைப் பகுதிக்கு முதன்முதலில் சென்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்.
1995இல் ஆனந்த் பட்வர்தன் சென்னைக்கு வந்திருந்தபோது அவரது 'நர்மதா டைரி' ஆவணப் படம் திரையிடப்பட்டது. எங்கள் பள்ளியில் 11, 12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை அந்தத் திரையிடலுக்கு அழைத்துச் சென்றிருந்தோம். அந்தப் படம் எங்கள் அனைவரையும் ஆழமாகப் பாதித்தது. வளர்ச்சி என்றால் என்ன, அதற்கு நாம் கொடுக்கும் விலை என்ன என்பது போன்ற கேள்விகளை அந்தப் படம் எழுப்பியது. சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், பல்வேறு தரப்பு மக்களின் வாழ்நிலைகள் ஆகியவற்றை மாணவர்கள் நேரடி சாட்சியாக, நேரில் கண்டு உணர வேண்டும் என்ற அடிப்படையில் சில நிகழ்ச்சிகளை எங்கள் பள்ளியில் நடத்திவருகிறோம். நர்மதா டைரி படம் பார்த்த பிறகு நர்மதை அணைக்கட்டுப் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முடிவு செய்தோம். அதன்படி 1996இல் நர்மதை அணைப் பகுதிகளுக்குச் சென்றோம். கிராமங்களிலேயே தங்கினோம். அங்கு அரசு செய்துவரும் பணிகளையும் இடப்பெயர்வுக்கு ஆளான மக்கள் படும் துயரங்களையும் நேரில் பார்த்தோம். பாபா ஆம்டே, மேதா பட்கர் போன்றவர்களையும் சந்தித்து விரிவாகப் பேசினோம். மேதா, அங்குள்ள பிரச்சினை பற்றி மூன்று மணி நேரம் எங்களுடன் பேசினார். முடிவுகளை முன்னிறுத்தாமல் எதார்த்த நிலவரங்களின் அடிப்படையில் எங்களை யோசிக்க வைத்தது அவரது உரையாடல். அடுத்த ஆண்டும் அங்கு சென்றிருந்தோம்.
அங்குள்ள நிலவரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வளர்ச்சிப் பணிகள் என்னும் பெயரால் மக்களுக்கும் இயற்கைக்கும் ஏற்பட்டுவரும் கொடுமைகளின் உதாரணமாக அங்குள்ள நிலை இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் கடுமையானவை.
நர்மதைப் பாதுகாப்பு இயக்கத்தின் முயற்சிகளைப் பற்றி?
2000ஆம் ஆண்டில் அணையின் உயரத்தைக் கூட்டிக்கொள்ளலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோதே இனி அணை உருவாவதைத் தடுக்க முடியாது என்று ஆகிவிட்டது. தற்போது இந்த இயக்கத்தின் முயற்சி எல்லாம் பாதிக்கப்படும் மக்களுக்கான மறுவாழ்வை உறுதி செய்வதற்கான போராட்டமாக இருக்கிறது. தற்போது மேதா பட்கர் உண்ணாவிரதம் இருந்ததும் இதற்காகத்தான்.
அரசுகளுடனும் நீதிமன்றங்களுடனும் போராடுவது ஒருபுறம் இருக்க, இந்தக் கிராமப் பகுதிகளில் மேதா பட்கரின் பணிகள் என்னவாக இருக்கின்றன?
காந்தியடிகள் சொன்னபடி ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவும் சுயசார்பும் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் உழைத்து வருகிறார். இயற்கையைப் பாதிக்காத எத்தனையோ சிறுசிறு திட்டங்கள் மூலம், சுற்றுச்சூழலுக்கு இசைவான தொழில்நுட்பங்களின் உதவியுடன் குடிநீர், பாசனம், சிறுதொழில் முதலானவை தொடர்பான பல சிறிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திவருகிறார்.
இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து கிடைக்கிறது?
மக்களிடம் இருந்து ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் நன்கொடை வாங்குகிறார். அதைத் தவிர அவரது பணிகளில் ஈடுபாடு கொண்ட சில தனிநபர்கள் தரும் நன்கொடையை ஏற்றுக்கொள்கிறார். எந்த அமைப்பிடமிருந்தும் நன்கொடை பெறக் கூடாது என்பது அவர் கொள்கை. குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேசத் தொண்டு அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து எந்த உதவியும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அவரைச் சந்தித்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
காந்தியை நான் நேரில் பார்த்ததில்லை. மேதாவைப் பார்க்கும்போது வாழும் காந்தியாகவே அவர் எனக்குத் தெரிகிறார். அகிம்சைப் போராட்டம், இயற்கையைப் பாதிக்காத வளர்ச்சி போன்ற அம்சங்களில் அவர் காந்தியின் வழிமுறையையே பின்பற்றுகிறார். கிராம மக்கள் அவரைத் தெய்வமாகவே பார்க்கிறார்கள்.
அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை அரசும் அரசியல் கட்சிகளும் எதிர்கொண்ட விதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதைப் பற்றிப் பேசவே எனக்கு விருப்பமில்லை. மிகவும் கசப்பான அனுபவமாக அது இருக்கிறது.
வளர்ச்சிப் பணி என்று வரும்போது மட்டும் எதிரும் புதிருமான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்துவிடும் அதிசயம் எப்படி நடக்கிறது?
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. மாபெரும் திட்டங்கள் மூலம் கட்சிகளுக்குக் கிடைக்கும் லாபம் ஒரு முக்கியமான விஷயம். இது தவிர பெரிய அணைகள், பெரிய பாலங்கள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற மாபெரும் திட்டங்கள் தங்களுக்குப் பெருமை சேர்க்கும் என்று அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். சிறிய திட்டங்கள், உள்ளூர் தீர்வு ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்ட காந்தியின் பார்வைக்கு நேரெதிரான பார்வை இது. உண்மையிலேயே இதனால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நம்பும் அரசியல்வாதிகளும் இருக்கலாம். இது போன்ற திட்டங்களின் மறுபக்கம் பற்றிய பார்வை அவர்களுக்கு இல்லை. ஒரு சிலர் அதைப் புரிந்துகொண்டாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
புலி வாலைப் பிடித்த கதையாகவும் இருக்கலாம் அல்லவா?
கிட்டத்தட்ட அப்படித்தான் ஆகிவிட்டது. பின் வாங்க முடியாத அளவுக்கு வேலைகள் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. எனவேதான் நர்மதைப் பாதுகாப்பு இயக்கம் தற்போது மறுவாழ்வுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறது.
அணைக்கட்டுப் பகுதிகளை நேரில் கண்ட உங்கள் மாணவர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?
யார் மீதும் எதையும் திணிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிலும் ஈடுபடும்படி மாணவர்களை நாங்கள் தூண்டுவதில்லை. பல விஷயங்களை அவர்களே நேரில் கண்டு, அந்த அனுபவத்தின் அடிப்படையில் சுயமான பார்வையையும் செயல்பாடுகளையும் வகுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். அணைக்கட்டுப் பகுதிகளை நேரில் பார்த்த பல மாணவர்கள் ஆழமான சலனங்களுக்கு உள்ளானார்கள். அவர்களில் சிலர் சென்னையில் பறக்கும் ரயில், தொழில்நுட்பப் பூங்கா முதலான திட்டங்களால் அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் சில பணிகளைச் செய்தார்கள். இப்படிச் சில மாணவர்கள் சுயமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட துறையில் அவர்களால் முடிந்த காரியங்களைச் செய்துவருகிறார்கள்.
உதவி: இரா. சக்திவேல்
| விடிவின்றி நீளும் துயரங்கள் நர்மதா நதியின் குறுக்கே ஒரு பெரிய அணை கட்ட வேண்டியது அவசியம்தானா என்ற ஒரு தேசியக் கேள்வி எழும்பியுள்ளது. இந்த வாதம் இது போன்ற பெரிய அணைகளைப் பராமரிப்பதிலும், அதே சமயத்தில் ஏழை எளிய மக்களுக்குச் சமத்துவ அடிப்படையில் நீதி வழங்குவதிலும் உள்ள கருத்து வேறுபாடுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அருந்ததி ராய் கூறுவது போல மிகப் பெரிய திட்டங்கள் இந்தியாவின் செல்வந்தர்களுக்கு நன்மை பயப்பதாகவும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியதாகவும் அமையக் கூடாது. அரசாங்கம் 30 பெரிய அணைக்கட்டுகளையும், 135 நடுத்தர அணைக்கட்டுகளையும் 3000 சிறிய அணைக்கட்டுகளையும், நர்மதா நதியின் குறுக்கேயும் அதன் கிளை நதிகளிலும் கட்டத் திட்டமிட்டுள்ளது. இவற்றில் 'சர்தார் சரோவர்' அணையே மிகப் பெரியதாகும். அந்த அணை 136.5 மீட்டர் (455 அடி) உயரமுடையதாக அமைய இருக்கிறது. 'நர்மதா பச்சாவோ அண்தோலன்' எழுப்புகின்ற கேள்விகளில் முக்கியக் கேள்வியாக இருப்பது இந்த அணைக்கட்டின் அதிகபட்ச உயரமும் அதனால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையுமே ஆகும். சர்தார் சரோவர் திட்டம் (ஷிஷிறி) குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள 18 இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி தரும் என்றும், வறட்சி நிலவும் குச், சௌராஷ்டிரா பகுதிகளின் தாகத்தைத் தணிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவ்வணைத் திட்டத்தின் பயன்பாட்டினை ஆய்வு செய்தவர்கள், மேலே கூறிய பயன்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்கிறார்கள், இதனால் அந்த அணையின் கால்வாய்களின் இருமருங்கிலும் சர்க்கரைத் தொழிற்சாலைகளை அமைத்துள்ள செல்வந்தர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் சொல்லப்படுகிறது. குச், சௌராஷ்டிரா பகுதிகளில் உள்ளூர் அளவில் மழை நீர் சேமிக்கும் திட்டமே பல நல்ல பயன்களைத் தருவதாகத் தெரிகிறது. இந்த அணைத்திட்டம் தற்பொழுது 3.2 லட்சம் மக்கள் குடிபெயரும் நிலைமையை உண்டாக்குவதுடன், மேலும் பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். கால்வாய்த் திட்டம், அதைச் சார்ந்த மற்ற திட்டங்கள் மூலம் குறைந்தது 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது. சர்தார் சரோவர் அணைக்கட்டின் மூலம் 200 கிலோமீட்டர் பரப்பளவிற்கு மக்கள் வசிக்கும் இடங்கள் தண்ணீரில் மூழ்குவதுடன் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. இம்மக்களுக்குப் புனர்வாழ்வு தருவதற்குச் சிறப்பான திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் வரலாறு வேறு விதமாக உள்ளது. 50 லட்சம் பேர் இதுவரை இது போன்ற வளர்ச்சித் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60%க்கும் மேலானவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் சென்று வாழ்வதற்கு வேறு இடம் இல்லை. நிரந்தர வருமானமோ நிரந்தர வேலையோ கிடைப்பதில்லை. இறுதியில் இவர்கள் பெரிய நகரங்களில் உள்ள சேரிகளில் சென்று தஞ்சமடைய வேண்டியுள்ளது. இப்பொழுது டில்லி, மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள சேரிகளில் ஏழை மக்கள் வசிக்கும் வீடுகளும் தரை மட்டமாக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றம் அக்டோ பர் 2000லும் மார்ச் 2005லும் இந்த அணைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தக்க மறுவாழ்வு ஏற்பாடு செய்யும்வரை அணையின் உயரத்தை 110 மீட்டருக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று திட்டவட்டமாக நர்மதா நீதிக் குழு மூலம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு, நர்மதைக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் புறக்கணிக்கப்பட்டு அணையின் உயரத்தை 121 மீட்டர் அளவிற்கு உயர்த்தும் வேலைகள் நடந்துவருகின்றன. இது போன்ற பெரிய திட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போன்ற சர்வதேச உடன்படிக்கைகள் ஆற்றில் விடப்பட்டன. வரலாற்றில் பெரும்பாலும் புறக் கணிக்கப்படும் ஏழை எளியவர்களின் துன்பங்களையும் துயரங்களையும் பெரிய திட்டங்களின் பெயரால் அவர்கள் சுரண்டப்படுவதையும் யார்தான் துடைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது. மேதா பட்கரின் போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னையில் வி. அருணா, சுமித்திரா எம், கௌதமா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த அடையாள உண்ணாவிரதத்தையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து |


No comments:
Post a Comment